கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் விசாக திருவிழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூன் 2014 12:06
நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், வைகாசி விசாக திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது; வரும், 10-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. கொடியேற்றத்துக்கான கொடிப்பட்டம், கோட்டார் இளங்கடை பட்டாரியர் சமுதாய ருத்திரபதி விநாயகர் சாஸ்தா டிரஸ்ட் சார்பிலும்; கொடிமரக் கயிறு, வாவத்துறை மீனவர் பிச்சையா குடும்பத்தை சேர்ந்த ஜெகன் தலைமையில் மீனவர்களும், ஊர்வலமாக எடுத்து வந்தனர். தந்திரி சங்கர நாராயணரரு, சிறப்பு பூஜைகள் நடத்தி கொடியேற்றினார். விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு அபிஷேகம், வாகன பவனி, சப்பரபவனி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 10-ம் தேதி காலை, 8:30-க்கு தேரோட்டமும், 11-ம் தேதி இரவு தெப்பத் திருவிழாவும் நடக்க உள்ளது.