பேரூர் : பூண்டி வெள்ளிங்கிரி மலையில், பிளாஸ்டிக் குப்பை அகற்றும் பணி நடந்தது. வெள்ளிங்கிரி மலையில் பக்தர்கள் விட்டுச்சென்ற பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி, மலையை துாய்மைப்படுத்தும் பணி, ஈஷா பசுமைக்கரங்கள் சார்பில் துவங்கப்பட்டது. பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றும் பணி, கோவில் அடிவாரத்தில் நடந்தது. சுமார் 250 ஈஷா தன்னார்வ தொண்டர்கள், கல்லுாரி மாணவர்கள், பக்தர்கள் வெள்ளிங்கிரி மலையேறி குப்பைகளை அகற்றினர்.