மொரட்டாண்டி சனீஸ்வரன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூன் 2014 01:06
புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில், கல்யாண சுந்தரருக்கு திருக்கல்யாணம் நடந்தது. புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் 27 அடி உயர விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு, லலிதாம்பிகை வேதசிவகாம டிரஸ்ட் சார்பில் கோகிலாம்பிகை சமேத கல்யாண சுந்தரருக்கு பிரதிஷ்டையும், திருக்கல்யாணமும் நடந்தது.திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிறுவனர்கள் சிதம்பரகுருக்கள், கீதாசங்கர குருக்கள், கீதாராம் குருக்கள் செய்திருந்தனர்.