ஒரு துறவியை சந்தித்த ஒருவன், சுவாமி! இல்லறத்தார் செய்யும் பூஜை, ஹோமம், யாகம் போன்றவற்றை தங்களைப் போன்ற சிலர் செய்வதில்லையே, ஏன்? என்று கேட்டான். மகனே! காற்றில்லாத போதுதான் விசிறி தேவை. தென்றல் வீசத் தொடங்கியதும் விசிறிக்கு என்ன வேலை? என்றார் துறவி. இறைவனிடம் முழுமையான பக்தி ஏற்பட்ட பிறகு பூஜை, ஹோமம், யாகம் போன்றவை தேவையே இல்லை.