மாவிலை ஒரு கிருமிநாசினி. இதற்கு துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தியும் உண்டு. மேலும் மாவிலை அழுகுவது கிடையாது. முறையாக காய்ந்து உலரும். இதுபோல், வாழ்க்கையும் கெட்டுப்போகாமல் நீண்டகாலம் நடைபெற்று முற்றுபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன், மங்கலம் பெருக மாவிலைத் தோரணம் கட்டுகிறோம்.
மாவிலைத் தோரணம் லட்சுமி கடாட்சத்தையும், மங்கலத்தையும் குறிப்பதாகும். கோயில், பெரியவீடுகளின் நிலைக்கதவில் கஜலட்சுமியை சிற்பமாக வடித்து வைத்திருப்பர். சுபவிஷயம் வீட்டில் நடக்கும் போது நிலைக்கதவில் இருக்கும் திருமகளைப் போற்றும் விதத்தில் மாவிலைத் தோரணம் கட்டுகிறோம்.