பதிவு செய்த நாள்
05
ஜூன்
2014
01:06
திருவாலங்காடு : வடாரண்யேஸ்வரர் கோவிலில், வழங்கும் மதிய அன்னதானம், 50 பக்தர்களில் இருந்து, 100 பக்தர்களுக்கு என, உயர்த்தப்பட்டது. திருத்தணி முருகன் கோவிலின் உப கோவிலான, திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலுக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சிவபெருமானை தரிசித்து செல்கின்றனர். இப்படி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு, மதிய வேளையில், தினமும் 50 பேருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிகளவில், பக்தர்கள் கோவிலுக்கு வருவதால், மதிய அன்னதானம், கூடுதல் பக்தர்களுக்கு வழங்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில், இந்து அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவுப்படி கடந்த, 1ம் தேதி முதல், 50 பக்தர்களில் இருந்து, 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க கோவில் நிர்வாகம் தீர்மானித்து, அத்திட்டம் துவங்கப்பட்டது. தற்போது, தினமும், 100 பக்தர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.