மதுரை : மதுரை அழகர்கோயில் ரோட்டில் உள்ள இண்டிகோ என்கிளேவ் குடியிருப்பில் புதிதாக ஸ்தாபகம் செய்யப்பட்டுள்ள, விஷ்வ மங்கள விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடந்தது.மணிகண்ட சாஸ்திரி வழிபாடுகளை நடத்தினார். குடியிருப்பு தலைவர் சுடலை, செயலாளர் ஜானகி பாலகிருஷ்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை மகளிர் அணி மீனா கோபாலகிருஷ்ணன், ஜெயலதா, ஜோதி மீனா செய்திருந்தனர்.