பதிவு செய்த நாள்
05
ஜூன்
2014
02:06
ஊத்துக்கோட்டை : நாகவல்லி அம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஊத்துக்கோட்டை, நாகலாபுரம் சாலையில் உள்ள நாகவல்லி அம்மன் கோவில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் கட்டி முடிக்கப்பட்டது. நேற்று, 12ம் ஆண்டை ஒட்டி கும்பாபிஷேக விழா நடந்தது.இதையொட்டி, நேற்று முன்தினம் காலை கணபதி பூஜை, வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம், பிரவேச பலி, நவகிரக ஹோமம், மூலமந்திர் ஹோமம், லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று காலை, 09:30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.