திருப்புத்தூர் தட்சிணாமூர்த்தி கோயிலில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூன் 2014 11:06
திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் நேற்று நடந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில்,பரிவார தெய்வங்கள் உள்ளிட்டவற்றிற்கு திருப்பணி நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த ஜூன் 1 ம் தேதியன்று யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று ஐந்தாம் நாளாக, அதிகாலை, பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. நான்காம் காலயாகசாலை பூஜைகள் துவங்கின. காலை 7.45 மணிக்கு யாகசாலையிலிருந்து, புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடந்தது. பின்னர், காலை 8.15 மணிக்கு சிவாச்சாரியர்களால் மூலவர் விமானத்திற்கு புனித நீரால்,கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், மகா அபிஷேகம் நடந்தது.மாலையில் மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர் வீரப்பச்செட்டியார்,வீர.மரகதவள்ளி ஆச்சி செய்திருந்தனர்.