குருவித்துறை : சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில், ஜூன் 13 ல் குரு பெயர்ச்சி நடப்பதையொட்டி, தேவயானி லீலை நடந்தது. ரகுநாத பட்டர் குருபகவானுக்கு பல்வேறு அபிஷேக, தீபாராதனைகளை செய்தார். ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சுமதி, ஊழியர்கள் வெங்கடேஷன், கிருஷ்ணன், நாகராஜன் செய்தனர்.