கருட வாகனத்தில் பவனி வந்த பெருமாளுக்கு பக்தர்கள், பழம், புஷ்பம், கற்கண்டு, வெற்றிலை பாக்கு, துளசி ஆகியவைகளைச் சமர்ப்பித்து வணங்கினர். ஆனால், ஒருவர் மட்டும் எதையும் சமர்ப்பிக்கவில்லை. மாறாக அவர், பெருமாளே, எல்லோரும் பூ, பழம் என உனக்குச் சமர்ப்பித்தார்கள். இவையெல்லாம் உன்னிடம் இல்லாததா என்ன? உன்னிடம் இல்லாததைக் கொடுத்தால்தானே பெருமை! அதை நான் தருகிறேன்! என்றார். பகவான் வியப்புடன் அவரைப் பார்க்க, பகவானே! துவாபர யுகத்தில் உன்மனத்தைக் கோபியர்களிடம் பறிö காடுத்து விட்டாய்... உன்னிடம் இல்லாத மனத்தை நான் உனக்குக் கொடுக்கிறேன். ஏற்பாயாக என்றார். அவர்தான் சுவாமி தேசிகன். தான் பாடிய யதிராஜ சப்ததியில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.