நாம் கோவிலுக்குச் செல்லும்போதும், தெய்வத்தைத் தொழும்போதும் சில விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.
*பிரதான வாயில் வழியாகத்தான் கோவிலுக்குள் செல்ல வேண்டும். * குறிப்பிட்ட சமயம் தவிர மற்ற நேரங்களில் கோயிலுக்குள் செல்லக்கூடாது. கோயிலுக்குள் இருக்கும் தூண்கள், சிலைகள் ஆகியவற்றின் மீது ஏறி அமரக் கூடாது. படுக்கவோ, தூங்கவோ கூடாது. * அர்ச்சனைப் பொருட்களை இடது கையில் தூக்கிச் செல்லக்கூடாது. * கோயிலில் அணைந்த விளக்கை ஏற்றலாம்; எரிந்து கொண்டிருக்கும் விளக்கை அணைக்கக்கூடாது. * விளக்கு அணையும் நிலையிலிருந்தால் திரியை சரி செய்து எரிய விட வேண்டும். சரி செய்யும்போது கையில் படும் எண்ணெயைத் தலையில் தடவக் கூடாது. * விளக்கு எரியாத இடத்தில் வழிபடக் கூடாது. * கோவிலின் தலை வாசல்படியில் சூடம் ஏற்றுவதோ, படியில் உட்காருவதோ கூடாது. * கோபு தரிசனம் கோடி புண்ணியம்! தவறாமல் கோபுரத்தை தரிசனம் செய்ய வேண்டும். * எக்காரணம் கொண்டும் கோயிலுக்குரிய பொருட்களை நாம் வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது. * கோயில் மூடியிருக்கும் போது வெளியில் நின்று வழிபடக்கூடாது. * கோயிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்தே கை கால்களை கழுவ வேண்டும்; ஆனால் குளிக்கக் கூடாது. * எல்லாமே நம்மால் பின்பற்றக்கூடியவைதான். இவற்றை மனதிற்கொண்டு தெய்வத்தைத் தொழுது அவன் அருளைப் பெறுவோமாக!