செல்லாண்டியம்மன் கோவிலில் கரக உற்சவ விழா பூகுண்டம் நடந்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2014 11:06
குன்னூர் லூர்துபுரம் செல்லாண்டியம்மன் கோவிலில் கரக உற்சவ விழா கொண்டாடப்பட்டது.கடந்த 8ம் தேதி, பகல் 1:30 மணிக்கு, மாவிளக்கு பூஜையை தொடர்ந்து, கஞ்சி வார்த்தலும், அன்னதானமும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு, பூகுண்டம் நடந்தது. தொடர்ந்து, அம்மனை கங்கையில் சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று பகல் 11:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இன்று (10ம் தேதி) காலை 11:00 மணிக்கு கருப்பராயனுக்கு எண்ணெய் மற்றும் பால் வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை 7:00 மணிக்கு, மதுரை வீரன் பூஜையும் நடந்தது.