பதிவு செய்த நாள்
10
ஜூன்
2014
12:06
செஞ்சி விஷ்ணு கருமாரியம்மன் கோவிலில் ஜீர்ணோதாரன மகா கும்பாபிஷேகம் வரும் 12ம் தேதி நடக்கிறது. செஞ்சி சேத்துப்பட்டு ரோட்டில் உள்ள விஷ்ணு கருமாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்துள்ளனர். இத்துடன் புதிதாக கருமாரியம்மன், விநாயகர், பாலமுருகன், நவகிரகம் பிரதிஷ்டை செய்து ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், வரும் 12ம் தேதி செய்ய உள்ளனர். இதை முன்னிட்டு 12ம் தேதி காலை நடக்க உள்ளது. இதை முன்னிட்டு நாளை (11ம் தேதி) யாகசாலை பூஜைகள் துவங்க உள்ளனர். இரவு 9 மணிக்கு சிலை பிரதிஷ்டையும், அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும் நடக்க உள்ளது.12ம் தேதி காலை 7 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, லட்சுமி பூஜை, கும்ப பிரதிஷ்டையும், மகா ஹோமமும், 10: 15 மணிக்கு மகா பூர்ணாஹூதியும் 10:30 மணிக்கு கடம் புறப்பாடும், 11 மணிக்கு மகா கும்பாபிஷேகமும், 11:30 மணிக்கு மகா தீபாராதனையும் நடக்கிறது.