Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகாலிங்கஸ்வாமி கோவிலில் ... சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் தேரோட்டம்! சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமர் முத்திரை காசை விரும்பிய ஷீர்டி சாயிபாபா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2014
01:06

ஸ்ரீஷீர்டிசாயிபாபா, தனக்கென எதையுமே வைத்துக்கொள்ளாத எளிமையும் பேரருளும் கொண்ட மகான்.  ஆனால், அவர்  ஆசையுடனும், பிரியத்துடனும் பக்தியுடனும் தன் சட்டைப் பைக்குள் ஒரு செப்பு நாணயத்தை பத்திரப்படுத்தி வைத்திருந்தார். அது சாதாரண நாணயமல்ல! நாணயத்தின் ஒருபக்கம் ஸ்ரீராமர், ஸ்ரீசீதாதேவி மற்றும் ஸ்ரீலட்சுமணர் ஆகியோரின் திருவுருவங்களும், மற்றொரு பக்கம் ஸ்ரீஆஞ்சநேயரின் திருவுருவமும் பொறிக்கப்பட்டிருந்த அபூர்வ நாணயம். இது குறித்த தகவல்கள், ஸ்ரீசாயி ராமாயணம் என அழைக்கப்படும் சாயி சரிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. பாபாவின் மீது அளவற்ற பிரேமை கொண்ட வாமன் ராவ் நார்வேகர் என்ற பக்தர், பாபாவுக்கு பக்தியுடன் அர்ப்பணம் செய்வதற்காக, அழகான செப்பு நாணயம் ஒன்றைக் கொண்டுவந்தார். அந்த நாணயத்தில்தான் ஸ்ரீராமர், ஸ்ரீலட்சுமணர், ஸ்ரீசீதை, ஸ்ரீஆஞ்சநேயர் ஆகியோரின் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

Default Image

பாபாவின் திருக்கரத்தால் தொடப்பட்டு, உதீ பிரசாதத்துடன் அதைத் திரும்பப் பெறவேண்டும் என்கிற நோக்கத்திலேயே அந்த பக்தர் அந்த நாணயத்தை பாபாவுக்கு அர்ப்பணம் செய்தார். ஆயினும், நாணயம் கையில் விழுந்ததுமே அதைத் தன் அங்கியில் இருந்த (கப்னி) பாக்கெட்டில் போட்டுக்கொண்டார் பாபா. ஸ்ரீசாயிநாதரின் அன்புத் தொண்டரான ஷாமா என்ற மாதவராவ் தேஷ்பாண்டே, வாமன்ராவின் விருப்பத்தை பாபாவிடம் தெரிவித்து, நாணயத்தைத் திருப்பிக் கொடுத்துவிடும்படி வேண்டினார். ஏன் திருப்பிக் கொடுக்க வேண்டும்? இதை நாமே வைத்துக்கொள்வோம்! என்று தீர்மானமாக மறுத்துச் சொல்லிவிட்டார் பாபா. பாபாவின் கை பட்ட அந்த நாணயத்தை மீண்டும் பெறுவதில் முனைப்பாக இருந்தார் வாமன்ராவ்.

சரி, அவர் இதற்கு விலையாக ரூ. 25/. கொடுப்பாரானால், நான் இந்த நாணயத்தைத் திரும்பத் தருகிறேன் என்றார் பாபா (அந்தக் காலத்தில் ரூ. 25 என்பது, கிட்டத்தட்ட இப்போதைய 25 சவரனுக்குச் சமம்). உடனே வாமன்ராவ் விரைந்து சென்று, பல இடங்களிலிருந்தும் கடனோ உடனோ வாங்கி, எப்படியோ சேகரித்துக்கொண்டு வந்து ரூ. 25/-ஐ பாபாவிடம் கொடுத்தார். ஆனாலும் பாபா, மூட்டை மூட்டையாக ரூபாயைக் கொண்டுவந்து கொடுத்தாலும், இந்த ஒரு நாணயத்துக்கு ஈடாகாது. அவற்றின் மதிப்பு இந்த நாணயத்தின் மதிப்பைவிட மிக மிகக் குறைவே! என்று சொல்லி, வாமன்ராவிடமிருந்து வாங்கிய ரூ. 25/-ஐயும் தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டார். பிறகு ஷாமாவிடம் அந்த அபூர்வ நாணயத்தைக் கொடுத்து, இது இனி உன் சேகரிப்பில் இருக்கட்டும். இதைப் பூஜையறையில் வைத்து தினமும் வழிபடு! என்றார்.

எதற்கும் ஆசைப்படாத பகவானே மிகவும் விரும்பி, இதை நாமே வைத்துக்கொள்வோம். இதை பூஜையறையில் வைத்து தினமும் வழிபடு! என்று கூறி, ஷாமாவிடம் அளித்த அந்த நாணயம், பாபாவின் மறைவுக்குப் பிறகு, ஷாமாவின் பாதுகாப்பில்தான் பல காலம் இருந்தது. ஷாமாவின் மறைவுக்குப் பின்னர், அவரின் ஒரே மகன் உத்தவ்ராவ், அந்த நாணயத்துக்கு தினசரி பூஜை செய்து வந்தார். அவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி இறந்துவிட்டார். இரண்டாவது மனைவி குஸும் தற்போது ஷீர்டியில் வசித்து வருகிறார். இவர்தான் அந்த நாணயத்தை பெட்டகத்தில் வைத்துப் பாதுகாத்து வருகிறார். தவிர, பாபா ஷாமாவுக்கு அளித்த பிள்ளையார் விக்கிரகம் ஒன்றும் இவருடைய பாதுகாப்பில் இருக்கிறது. ஷோலாப்பூரிலிருந்து வந்த பக்தர் ஒருவர் பாபாவுக்கு வழங்கிய விக்கிரகம் அது. பாபா மறைந்து இந்த 96 ஆண்டுகளில் ஷாமா குடும்பத்தாரைத் தவிர, வெளியுலகில் யாருமே அந்த நாணயத்தைப் பார்த்ததில்லை. உத்தவ்ராவுக்குப் பிறகு பூஜைகளும் செய்யப்படவில்லை. பாபாவின் கை பட்ட பெருமைக்குரிய அந்த நாணயமும், பாபாபூஜை செய்த அந்தப் பிள்ளையார் விக்கிரகமும், சென்னை தி.நகரில் இயங்கி வரும் ஸ்ரீஷீர்டி சாயிபாபா பிரார்த்தனை மையத்துக்கு அண்மையில் எடுத்து வரப்பட்டன.

தி.நகர் மையத்தின் நிர்வாக அறங்காவலரும், ஓய்வுபெற்ற பேராசிரியருமான திருவள்ளுவன் கூறியதாவது:

12 ஆண்டுகளாக பாபா என் வாழ்வில் இரண்டறக் கலந்து, பல்வேறு உயர்வுகளையும் முன்னேற்றங்களையும் எனக்கு அருளி வருகிறார். இந்த 12 ஆண்டுகளில் சாயி அருளால் நான் 60 தடவை ஷீர்டி போயிருக்கிறேன். பலப்பல முறை அவரின் சத்சரிதம் படித்திருக்கிறேன். அந்த நாணயத்தைப் பற்றியும், விநாயகரைப் பற்றியும் படித்திருந்தாலும், கடந்த வருடம்தான் திடீரென அந்த யோசனை தோன்றியது. பாபாவின் அருள் கடாட்சம் பெற்ற அந்த இரண்டையும் நமது பிரார்த்தனை மையத்துக்கு ஒரே ஒரு நாள் மட்டும் எடுத்து பூஜை செய்தால் என்ன என்று பெரு விருப்பம் எழுந்தது. அதுவும் பாபாவின் வேலை, விருப்பம் என்பதாகவே நினைக்கிறேன்.

அதன்பின் ஒருநாள், நானும் சாயி அன்பர் ஒருவருமாக ஷீர்டியில், குஸும் அம்மா வீட்டுக்குப் போனோம். உத்தவ் ராவின் நண்பர் கோபிதான் எங்களை அவரிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த அம்மாவிடம் நமது தியான மையத்தைப் பற்றிக் கூறி, ஒரே ஒரு நாள் மட்டும் பூஜைக்கு அந்தப் பிள்ளையார் விக்கிரகத்தைத் தந்து உதவ முடியுமா என்று கேட்டேன். அந்தப் பிள்ளையார் விக்கிரகம் இதற்கு முன் ஒரு முறை விசாகப்பட்டினம் எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.

அந்த அம்மா பிள்ளையாருடன் ஓரிடத்தில் பத்திரமாக வைத்திருந்த அந்த நாணயத்தையும் எடுத்து வந்து எங்களிடம் தந்தார். இதற்கு முன் பலர் விரும்பிக் கேட்டும், அந்த நாணயத்தை அவர் யாரிடமும் காண்பித்ததுகூட இல்லையாம். அவ்வளவு ஏன்... இங்கே 25 வருடங்களாக வந்து போய்கொண்டிருக்கிறேன். ஆனால், நானே இதுவரை இந்த நாணயத்தைப் பார்த்தது இல்லை. இப்போதுதான் முதன்முதலாகப் பார்க்கிறேன்! என்று, உத்தவ்ராவின் நண்பர் கோபியே ஆச்சர்யத்தில் மெய்மறந்தார். பாபாவே தன் கையால் வாங்கி, மிகுந்த விருப்பத்துடன் தன் பையில் போட்டுக்கொண்ட பேறு பெற்ற அந்தப் பரவசத்தில் எங்களுக்கு வார்த்தைகளே வரவில்லை. கண்கள் நிறைந்து, நெஞ்சம் ஆனந்தத்தில் நெகிழ்ந்தது.

பிறகு, அந்த விநாயகரையும் நாணயத்தையும் நம் பிரார்த்தனை மையத்துக்கு குஸும் அம்மையாரே எடுத்து வந்தார். அவற்றுடன், பாபா புகை பிடிக்கும் குழல் (சிலிம்), ஷாமாவுக்கு பாபா கொடுத்த அவரது வேஷ்டி (பாலகங்காதர திலகர் பாபாவுக்குக் கொடுத்த வேஷ்டி அது) போன்றவற்றையும் எடுத்துவந்தார். கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகு முதன்முறையாக அந்த நாணயத்துக்குப் பூஜை செய்யும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது. இது பாபாவின் ஆசிர்வாதம் இல்லாமல் வேறு எதுவும் இல்லை. கடந்த 19.1.14 அன்று, தி.நகர் பிரார்த்தனை மையத்துக்கு வந்த அவை இரண்டுக்கும் முறைப்படி பூஜைகள் செய்து வழிபட்டோம். பின்னர் அவற்றை சாயி பக்தர்களின் தரிசனத்துக்காக அருகிலிருந்த பள்ளி மைதானத்தில் வைத்திருந்தோம். அநேகம் பேர் வந்து தரிசித்து, பாபாவின் அருளையும் ஆசியையும் பெற்றுச் சென்றார்கள். மீண்டும் அவற்றை அந்த அம்மையார் எடுத்துச் சென்று, பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்துவிட்டார்.

இதை பூஜை அறையில் வைத்து தினமும் வழிபடு என்று பாபாவே கூறிய அந்தப் புனித நாணயத்தை நாம் தினமும் பூஜித்தால் என்ன? என்று தோன்றவே, மீண்டும் ஷீர்டி சென்று, அவர்களிடம் முறைப்படி அனுமதி பெற்று, அந்த நாணயத்தைப் புகைப்படம் எடுத்து வந்தோம். எப்படி பாபாவின் புகைப்படத்தை வைத்து பூஜைகள் செய்து வணங்குகிறோமோ, அதேபோல அந்த நாணயத்தின் புகைப்படத்தை நம் பிரார்த்தனை மையத்தில்வைத்து, பாபா சொன்னதுபோலவே நித்திய பூஜைகள் செய்யப்படுகிறது.  பக்தர்கள் வந்து, பூஜையில் கலந்துகொண்டு, ஸ்ரீசாயிநாதனின் அருளைப் பெறவேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்! என்று தெரிவித்தார் திருவள்ளுவன்.

தகவல்: பி. மீனாட்சி சுந்தரம்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவில், பங்குனி உத்திர தேரோட்டம் இன்று நடப்பதால், போக்குவரத்தில் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் ஆறாம் திருநாளில் உறையூர் ... மேலும்
 
temple news
வடபழனி; சென்னை, வடபழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும், பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 திவ்யதேசங்களில் 20வது தலமாகவும், 40 ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி கோயிலில் குழந்தை ராமர் சிலை உள்ள நிலையில், கோயிலின் முதல் தளத்தில் மன்னர் ராமர் சிலையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar