பதிவு செய்த நாள்
10
ஜூன்
2014
02:06
ராமநாதபுரம் : ராமநாதபுரம் வெளிபட்டணம் திரவுபதை அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலை 5 மணிக்கு கோ பூஜை, கடங்கள் புறப்பாடாகின. 10 மணிக்கு கோபுரக் கலத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம், 10.30 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர். இளமனூர் வைகை ஆறு அங்காளபரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
ராமேஸ்வரம்: பாம்பன் தெற்குவாடி கற்பக விநாயகர் கோயிலில் திருப்பணிகள் முடிந்து, ஜூன் 8ம் தேதி, அனுக்ஞை பூஜை, வாஸ்து சாந்தி பூஜையுடன், முதல் காலயாக பூஜை துவங்கியது. நேற்று காலை, 2ம் காலயாக பூஜை முடிந்தவுடன், கோயில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மாவட்ட முத்தரையர் சங்க தலைவர் கோவிந்தன், பாம்பன் பரதவகுல தலைவர் சைமன், மீனவர் சங்க தலைவர்கள் இருதயம், எஸ்.பி. ராயப்பன், ராமேஸ்வரம் தாலுகா முத்தரையர் சங்க தலைவர் சுந்தர்ராஜன், கிராம நிர்வாகிகள் களஞ்சியம், முனீஸ்வரன் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே கீழச்சாக்குளம் அய்யனார் கோயிலில் ஆறுகால யாக பூஜைகளுடன், கருட வாகன தோற்றத்திற்கு பின், கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் அன்னதானம் நடந்தது. எம்.எல்.ஏ., முருகன், இளைஞரணி செயலாளர் மாடசாமி, கோயில் டிரஸ்டிகள் பெரியகருப்பன், கிருஷ்ணன், சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவாடானை: திருவாடானை அருகே ஆய்ங்குடியில் அன்னதான விநாயகர், சம்பூரணியில் மஹாகணபதி, முத்துமாரியம்மன், தோட்டாமங்கலத்தில் பெரியநாயகி அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம் நேற்று காலை 9.30 மணிக்கு நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கும்பங்களில், புனித நீர் ஊற்றபட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.