தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2014 04:06
சேத்தூர்: தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. பாண்டிய நாட்டு பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாயஸ்தலமான தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்திருவிழா கடந்து 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் சுவாமியும் அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். 7ம் திருநாளில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காலை தேரோட்டம் கோயிலின் பரம்பரை அறங்காவலர் துரைராஜசேகர் முன்னிலையில் நடந்தது. முதலில் வந்த பெரிய தேரில் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமியும், பிரியாவிடை அம்மனும் வந்தனர். பின்னாடி வந்த சிறிய தேரில் தவம்பெற்ற நாயகி அம்மன் வந்தார். அம்மன் தேருக்கு பின்னாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் நோய் தீரவும், குடும்பம் செழிக்கவும், நோயின்றி வாழ அம்மனுக்கு அங்கப்பிரதட்சனம் செய்தனர். தேர் நான்கு மாடவீதிகளின் வழியாக நிலையம் வந்தடைந்தது. தேரோட்ட நிகழ்சியில் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.