காரைக்கால் வீர மாகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2014 01:06
காரைக்கால்: வீர மாகாளியம்மன் கோவிலில் 39ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது. காரைக்காலில் மிக பழமையான வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 39ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று முன்தினம் வீரமாகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. 150க்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர். அம்மனுக்கு புஷ்பாஞ்சலி, கஞ்சி வார்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.