பல்லடம் : கணபதிபாளைத்தில் உள்ள பட்டத்தரசி அம்மன், மதுரை வீரன் கோவிலில் பூச்சாட்டு பொங்கல் விழா நேற்று நடந்தது. கணபதிபாளையத்தில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவில் விழா, கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திங்கட்கிழமை இரவு மந்தை முனி பூஜை, நேற்று முன்தினம் சாமி ஊர்வலம், மதுரை வீரன் பந்த ஊர்வலம் நடந்தது. நேற்று காலை அம்மன் அழைப்பு, மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. மாலை, பொங்கல் வைத்து மதுரை வீரனுக்கு உச்சி பூஜை நடந்தது.