பதிவு செய்த நாள்
12
ஜூன்
2014
02:06
புதுச்சேரி: அய்யப்ப சுவாமி கோவிலில், பிரதிஷ்டா தின விழா நேற்று நடந்தது. பாரதிபுரத்தில், அய்யப்ப சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, பிரதிஷ்டா தினத்தை முன்னிட்டு, மகா கணபதி ஹோமத்துடன் பூஜைகள் நேற்று காலை துவங்கியது. பின், சுவாமிக்கு, 1008 கலச அபிஷேகம் நடந்தது. மாலையில், மகா தீபாராதனையும், புஷ்பாபிஷேகமும், அத்தாழ பூஜையும், ஹரிவராசஸனமும் நடந்தது. சபரிமலையின் பிரதான தாந்திரி கண்டாரு மஹேஷ்வரரு பங்கேற்று, அனைத்து பூஜைகளையும் நடத்தினார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, புதுச்சேரி அய்யப்ப சுவாமி சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.