சாயல்குடி : சாயல்குடி அருகே மேலச்செல்வனூரில் கண்ணண் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. நான்கு கால பூஜை நடந்தது. வேதமந்திரங்கள் முழங்க கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஆர்.எஸ்.மங்கலம்: வரவணி ஊராட்சி வ.பரமக்குடியில் தீபாஞ்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக யாகசாலை பூஜைகள், சிறப்பு அபிஷேகம், ஆதாரனைகள் நடந்தது. சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.