செஞ்சி: காரியமங்கலம் கருணா சாயி பாபா கோவிலில் குருப்பெயர்ச்சி யாகம் மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. செஞ்சி தாலுகா காரியம ங்கலம் கருணா சாயி பாபா கோவிலில் தன்வந்தரி சன்னதி, நாக தேவதைகள், லஷ்மி, சரஸ்வதி சாமி சிலைகள் பிரதிஷ்டை கடந்த ஏப். 20ம் தேதி நடந்தது. தொடர்ந்து 48 நாள் மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. இதன் நிறைவு விழா மற்றும் குருப்பெயர்ச்சி சிறப்பு ஹோமம் நேற்று நடந்தது. இதில் கலச பிரதிஷ்டை செய்து விக்னேஷ்வர ஹோமம், லட்சுமி ஹோமம், தன்வந்தரி ஹோமம், சிறப்பு அபிஷேகம் செய்தனர். கருணா சாயி டிரஸ்ட் தலைவர் ரகுநாதன், வழிபாட்டு குழு ரவிச்சந்தின் உட்பட பலர் கலந்து கொண்டனர். சென்னை லட்சுமிபதி சாஸ்திரிகள், பாலகணேஷ் சாஸ்திரிகள் தலைமையில் யாக சாலை பூஜைகளை செய்தனர்.