பேரூர் : பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், குருப்பெயர்ச்சி விழா இன்று நடக்கிறது. இன்று, மிதுனராசியிலிருந்து கடகராசிக்கு குருபகவான் பெயர்ச்சி ஆகிறார். இதையடுத்து, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா மாலை 4.00 மணிக்கு துவங்குகிறது. கோவிலின் உள்பிரகாரத்திலுள்ள தட்சிணாமூர்த்தி பகவானுக்கும், நவகிரகத்திலுள்ள குருபகவானுக்கும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து, புனிதநீர் கலசம் வைத்து தட்சிணாமூர்த்தி யாகம், குருபகவான் யாகமும் செய்யப்படுகிறது. அக்கலச தீர்த்தம் மூலம் தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம் நடக்கிறது. அபிஷேகம் முடித்து குருபகவானுக்கு மஞ்சள் பட்டாடை வஸ்திரம் கட்டி அலங்கரித்து, அலங்காரத்துடன் மகாதீபாராதனை நடக்கிறது. விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி சிறப்பாக இருக்கும்.