பதிவு செய்த நாள்
13
ஜூன்
2014
03:06
பேரூர்: மருதமலை சுப்ரமணியசாமி கோவிலில், வைகாசி விசாக விழா நேற்று முன் தினம் நடந்தது. காலை 5.15 மணிக்கு கோபூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, 6.00 மணிக்கு உச்ச கால பூஜை, 8.30 மணிக்கு காலசந்தி, அபிஷேகம் மற்றும் 9.00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, 11.30 மணிக்கு, வடவள்ளி, பிள்ளையார் கோவிலிலிருந்து ஊர்பொதுமக்கள் சார்பில், பாதயாத்திரையாக பால்குடம் எடுத்து வந்து, சுப்ரமணியசாமிக்கு மகா அபிஷேகம் நடந்தது. பின்னர், உச்சிகால பூஜையும், சாயரட்சபூஜைகளும் நடந்தது. கோவிலில், ஒயிலாட்டம், காவடியாட்ட நிகழ்ச்சியும் நடந்தது.பேரூரில் வைகாசி விசாக விழா: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், வைகாசி விசாக விழா சிறப்பாக நடந்தது. நேற்று முன் தினம் காலை 10.00 மணிக்கு, விநாயகர் சன்னதியிலிருந்து 21 பால் குடங்கள் எடுத்து வந்தனர். பாலதண்டபாணி சாமிக்கு, வைகாசி விசாகத்தையொட்டி, பாலாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தது. இதன் பின், பாலதண்டபாணி ராஜஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசித்தனர்.