பதிவு செய்த நாள்
13
ஜூன்
2014
03:06
இன்று குரு பெயர்ச்சியை ஒட்டி, குரு பகவான் கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.மிதுன ராசியிலிருந்து குரு பகவான், இன்று மாலை 5:57 மணிக்கு கடக ராசிக்கு இடம் பெயர்கிறார். இதை ஒட்டி, காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் காயாரோகணீஸ்வரர் கோவிலில் உள்ள குரு பகவான் சன்னிதி மற்றும் காஞ்சிபுரத்தை அடுத்த, கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி கோவில் ஆகிய இடங்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடுகள்செய்யப்பட்டு உள்ளன.நகரி, காமாட்சியம்மன் உடனுறை கரகண்டேஸ்வரர் கோவிலில், இன்று குருபெயர்ச்சியை ஒட்டி,தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடக்கின்றன.பரிகாரம் செய்ய வேண்டிய கடகம், ரிஷபம், மேஷம், கும்பம், தனுசு, துலாம், சிம்மம் உள்ளிட்ட ராசிகளைச் சேர்ந்தவர்களும், அனுகூலமான பலன்களை பெறும் கன்னி, விருச்சிகம், மகரம், மீனம், மிதுனம் உள்ளிட்ட ராசிகளைச் சேர்ந்த பக்தர்களும், பூஜையில் கலந்து கொண்டு தட்சிணாமூர்த்தியின் அருளை பெறலாம்.அதிகாலை 4:00 மணி முதல், காலை 7:00 மணி வரை, சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடக்கிறது.இதேபோல், புத்தூர், சதாசிவேஸ்வரர் மற்றும் நாராயணவனம் அகத்தீஸ்வரர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு பூஜை நடக்கிறது.