சூலுார்: வைகாசி விசாகத்தை ஒட்டி, கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில், சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவில், அறுபடை முருகன் கோவில், சூலுார் சிவன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெருமானுக்கு அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து உற்சவர் திருவீதி உலா நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபாட்டில் பங்கேற்றனர்.