மேலூர்: மேலூர் திரவுபதியம்மன் கோயில் வைகாசி மாத பூக்குழி திருவிழா நடந்தது. ஜூன் 2ல் கொடியேற்றம், அதைதொடர்ந்து திருக்கல்யாணம், பீமன் வேடம் சக்கரவியூககோட்டை, அர்ச்சுணன் தவசு, கூந்தல் விரிப்பு மற்றும் முடிப்பும் நிகழ்ச்சிகள் நடந்தது.முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் நேற்று நடந்தது. நகை மற்றும் அடகு கடை உரிமையாளர்கள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவுற்றது.