பதிவு செய்த நாள்
13
ஜூன்
2014
04:06
ப.வேலூர்: கபிலர்மலை பாலசுப்ரமணியர் கோவிலில், உண்டியல் திறக்கப்பட்டதில், பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை எண்ணப்பட்டது.ப.வேலூர் அடுத்த கபிலர்மலை பாலசுப்ரமணியர் கோவில், ஹிந்துசமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் திருவிழா மற்றும் முக்கிய விரத நாட்களில், ஆயிரக்கணக்கான மக்கள், ஸ்வாமியை வழிபட்டு செல்வர். அவர்கள், காணிக்கையாக அங்குள்ள உண்டியலில், பணம், நகை, வெள்ளி உள்ளிட்ட பொருட்களை செலுத்தி வந்தனர். நேற்று, கோவில் செயல் அலுவலர் ராஜாராம் தலைமையில், பொதுமக்கள் முன்னிலையில், கோவில் உண்டியல் திறக்கப்பட்டு, அதில் உள்ள பணம், நகை உள்ளிட்டவை கணக்கிடப்பட்டது.அதில், மூன்று லட்சத்து, 54 ஆயிரத்து 452 ரூபாய், 35 கிராம் தங்கம், 511 கிராம் வெள்ளி உள்ளிட்டவை இருந்தது. "பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பொருட்கள், ஹிந்துசமய அறநிலைய துறையினர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.