பதிவு செய்த நாள்
16
ஜூன்
2014
09:06
கிரகங்கள் சாதகமாக அமைந்துள்ளதால் இந்த மாதம் சிறப்பாக அமையும். செல்வாக்கும் பணவளமும் பெருகும். எந்த விஷயத்திலும் ஒரு தெளிவை பெறலாம். எதையும் சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் பிறக்கும். சுக்கிரனால் பொருளாதார வளம் இருக்கும். மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். உங்கள் ஆட்சி நாயகன் செவ்வாயால் அபார ஆற்றல் பிறக்கும். புதன் ஜூலை வரை 2-ம் இடத்தில் இருப்பதால் அவப்பெயர் வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. ராகு ஜூன் 21ல் 6-ம் இடமான கன்னிக்கு வருகிறார். அதன்பின் முயற்சிகளில் வெற்றியைத் தருவார்.
பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும். ஆனால், கேது 12-ம் வீடான மீன ராசிக்கு மாறுகிறார். இதனால் பொருள் விரயம் ஏற்படலாம். வீடு, மனை வாங்க யோகம் கூடி வரும். பணியாளர்கள் வேலையில் பளிச்சிடுவர். அரசுப்பணியாளர் கோரிக்கை நிறைவேற தாமதமாகும். மாத இறுதியில் பதவி உயர்வு கிடைக்கும் தொழில், வியாபாரத்தில் சிறப்படையலாம். அரசின் சலுகை, வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். ஜூலை 4க்கு பிறகு வீண் செலவு ஏற்படும். வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக்கொள்ளவும். கலைஞர்களுக்கு மதிப்பு, பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் நல்ல நிலையில் இருப்பர். மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக இருக்கும். புதிய நிலம் வாங்க நினைப்பவர்கள் எண்ணம் நிறைவேறும். பெண்கள் நகை வாங்கலாம். கணவர் மற்றும் குடும்பத்தாருடன் சுற்றுலா சென்று வருவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு
அதிகரிக்கும். மருத்துவச் செலவு குறையும்.
நல்ல நாள்: ஜூன் 16,17,18,19,22,23,27,28, ஜூலை 4,5,6,7, 8,13,14,15,16
கவன நாள்: ஜூலை 9,10.
அதிர்ஷ்ட எண்: 2,3 நிறம்: செந்துõரம்,வெள்ளை
வழிபாடு: புதன்கிழமை குலதெய்வத்தை வணங்கி ஏழைகளுக்கு பாசிப்பயறு தானம் செய்யுங்கள். பத்திரகாளிக்கு எலுமிச்சை மாலை சூட்டுங்கள்.