பதிவு செய்த நாள்
16
ஜூன்
2014
09:06
உங்கள் ராசிநாயகன் சுக்கிரன் மாத ஆரம்பத்தில் 12ம் இடத்தில் உள்ளதால், அவரால் காரியத்தடை. பொருள் நஷ்டம் ஏற்படலாம். ஆனால், ஜூன் 18 க்கு பிறகு இது சரியாகி விடும். பெண்களால் பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். சனி மாதம் முழுவதும் முழு பலனைக் கொடுப்பார். மேலும் கேது ஜýன் 21ல், 11ம் இடமான மீனத்திற்கு சென்று வளத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுப்பார். எடுத்த செயல்கள் வெற்றிகரமாக முடியும். அதே நேரம் ராகு 5-ம் இடமான கன்னி ராசிக்கு வருவது சிறப்பான இடம் அல்ல. அவர் குடும்பத்தில் சிற்சில பிரச்சினையை உருவாக்கலாம். பணியாளர்களுக்கு டிரான்ஸ்பரும், ஜூலை 4க்கு பிறகு அவப்பெயரும் வரலாம். பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். ஜýன்20,21-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறப்படையும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். பிற்பகுதியில் பொருளாதார வளம் நன்றாக இருக்கும். அரசின் சலுகை கிடைக்கும். ஜூலை 6,7,8ல் திடீர் பண
வரவுக்கு வாய்ப்பு உண்டு. கலைஞர்களுக்கு 10ம் தேதிக்கு பிறகு புதிய ஒப்பந்தங்களும், அரசிடம் இருந்து விருதும் கிடைக்கும். அரசியல்வாதிகள் அதிக பலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். விவசாயிகளுக்கு கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் உண்டு. நெல், நிலக்கடலை, கிழங்கு வகைகள் போன்றவை நல்ல மகசூல் தரும்.மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்தால் மதிப்பெண் குறையாது. பெண்களுக்கு பணத்தேவை அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு பெறலாம். புத்தாடை, நகை வாங்கலாம். செவ்வாயால் உடல்நலம் லேசாக பாதிக்கப்படலாம். பிள்ளைகள் உடல்நிலையிலும் அக்கறை தேவை.
நல்ல நாள்: ஜூன்18,19,20,21, 24,25,26,29,30 ஜூலை1,6,7,8, 9, 10,15,16.
கவன நாள்: ஜூலை11,12 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 4,7 நிறம்: வெள்ளை, சிவப்பு.
வழிபாடு: பசுவுக்கு பசுந்தழை கொடுங்கள். சூரிய வழிபாடு நடத்துங்கள். ஞாயிற்றுக்கிழமை ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யுங்கள். செவ்வாயன்று முருகன் வழிபாடு தைரியத்தைத் தரும்.