பதிவு செய்த நாள்
16
ஜூன்
2014
09:06
இம்மாதம் சீரான பலனைக் காணலாம். முக்கிய கிரகங்களில் குரு மட்டும் மாதம் முழுவதும் நன்மைகளை தருவார். துணிச்சல் பிறக்கும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். சுக்கிரனால் சிறப்பான பணப்புழக்கம் இருக்கும். உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். பெண்களால் பொருள் சேரும். பாங்க் கையிருப்பு உயரும் என்பதால் விரும்பிய பொருட்களை வாங்கலாம். விருந்து விழா என சென்று வருவீர்கள். மற்ற கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் உங்கள் முயற்சியில் தடைகள் வரலாம். ஆனாலும் சுறுசுறுப்பாக செயல்பட்டால் முயற்சி கைகூடும். கேது உங்கள் ராசிக்கு 11ம் இடமான மேஷத்தில் இருந்து பல்வேறு நன்மைகளைத் தருவார். அவர் ஜýன்21ல் 10-ம் இடமான மீனத்திற்கு செல்கிறார். இது சிறப்பானது என்று சொல்ல முடியாது. உடல் உபாதைகளைத் தரலாம். ராகு 5-ம் இடமான துலாமில் இருந்து 4-ம் இடமான கன்னிக்கு செல்லும் போது குடும்ப பிரச்னை மறையும். அதே நேரம் அலைச்சலையும், புதிய பிரச்னைகளையும் உருவாக்கலாம். புதனால் ஜூலை 4க்கு பிறகு வீட்டுப் பிரச்னை வரலாம். உறவினர்கள் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படும். பணியாளர்கள் இடமாற்றம் காண்பர். அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் நல்ல பலனை காணலாம். தொழில், வியாபாரத்தில் கூடுதல் வருமானம், திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களால் வசதிகளை அடைவர். அரசியல்வாதிகள் சிறப்பான நிலையில் காணப்படுவர். மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். ஆசிரியர்களின் அறிவுரை கைகொடுக்கும். ஆண்டின் ஆரம்பத்திலேயே அதிக சிரத்தை எடுத்து படித்தால் அதிக மதிப்பெண் கிடைக்கும். நவீன யுக்தியை பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்தலாம். பெண்கள் கணவருடன் விட்டுக் கொடுத்து போகவும். பணம், நகை, ஆடை கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். அலைச்சலும் சோர்வும் ஏற்படும். வயிறு தொடர்பான பிரச்னை வரலாம்.
நல்ல நாள்: ஜூன்15,20,21,22,23,27,28 ஜூலை 2,3,9,10,11,12.
கவன நாள்: ஜூன் 16,17 ஜூலை 13,14.
அதிர்ஷ்ட எண்: 1,9 நிறம்: மஞ்சள், வெள்ளை
வழிபாடு: ஏழை மாணவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.தினமும் காலையில் சூரியனை தரிசனம் செய்யுங்கள். செவ்வாயன்று முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள். வெள்ளிக்கிழமை பெருமாளுக்கும், சுக்கிரனுக்கும் அர்ச்சனை செய்யுங்கள்.