பதிவு செய்த நாள்
16
ஜூன்
2014
09:06
இந்த மாதம் புதன் ஜூலை 4 வரையும், சுக்கிரன் ஜýன் 18ல் இருந்து ஜூலை14 வரையும் நன்மை தருவார்கள். செவ்வாய் மாதம் முழுவதும் நன்மை தருவார். கடவுளிள் கருணை உங்களுக்கு கிடைக்கும். எடுத்த செயல்கள் அனைத்திலும் வெற்றிகாணலாம். பொருளாதார வளம் மேம்படும். ராகு ஜýன்21ல் துலாம் ராசியில் இருந்து கன்னிக்கு வந்து நற்சுகத்தையும், பொருளாதார வளத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், தொழில் விருத்தியையும் கொடுப்பார். ஆனால், கேது 9-ம் இடமான மீனத்திற்கு போய், ராகு கொடுத்த பொருளைப் பறிப்பார். ஆக, பொருளாதார சூழல் சமஅளவில் இருக்கும். புதனால் ஜூலை 4வரை குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.அதன்பின் எதிரிகளால் தொல்லை வரலாம். கணவன்-மனைவி இடையே அன்பு மேம்படும். ஜýன் 18க்கு பிறகு அவப்பெயர் மறையும். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். உறவினர் வகையில் வீண்விரோதம் வரலாம். பணியாளர்களுக்கு இடமாற்றம் வர வாய்ப்பு உண்டு. போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். தொழில், வியாபாரத்தில் ஜýன்15, ஜூலை11,12ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். கலைஞர்கள் ஜýன்18க்குப்பிறகு புதிய ஒப்பந்தங்களை பெற்று முன்னேற்றம் அடையலாம். அரசியல்வாதிகள் மனதிருப்தியோடு காணப்படுவர். மாணவர்களுக்கு புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி காணலாம். ஜூலை18க்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். விவசாயம் வேலைப்பாடு அதிகமாக இருந்தாலும் வருமானம் குறையாது. புதிய சொத்து வாங்கலாம்.வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பெண்கள் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவார்கள். குடும்பம் நல்ல நிலைக்கு வரும். பிறந்த வீட்டிலிருந்து பொருட்கள் வர வாய்ப்பு உண்டு. உடல்நலத்தில் சிறிது அக்கறை காட்டவேண்டி இருக்கும்.
நல்ல நாள்: ஜூன்15,16,17,22,23,24,25,29,30 ஜூலை1,4, 5,11,12,13,14.
கவன நாள்: ஜூன்18,19 ஜூலை15,16 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 3,7 நிறம்: வெள்ளை, சிவப்பு.
வழிபாடு: ஞானிகளுக்கு காணிக்கை செலுத்தி ஆசி பெறுங்கள். புதன் கிழமை குலதெய்வத்தை வழிபட்டு ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குங்கள். காலையில் சூரியனை வழிபடுங்கள். கோதுமை, பாசிப்பயிறு தானம் செய்யலாம். வியாழக்கிழமை தட்சிணா மூர்த்தியை வழிபட தவறாதீர்கள்.