பதிவு செய்த நாள்
16
ஜூன்
2014
12:06
ஸ்ரீபெரும்புதுார்: சீரடியிலிருந்து வந்த பல்லக்கில், ஸ்ரீபெரும்புதுாரில், சாய்பாபா நேற்று முன்தினம் வீதி உலா வந்தார். ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, பாடிச்சேரியில், சாய்பாபாவுக்கு கோவில் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், சாய்பாபாவிற்காக, பல்லக்கு வடிவமைக்கப்பட்டது. இந்த, புதிய பல்லக்கு, சீரடிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு, சாய்பாபா வீதி உலா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, சீரடியில் வீதி உலா வந்த பல்லக்கு, ஸ்ரீபெரும்புதுார் கொண்டு வரப்பட்டது. இந்த பல்லக்கில், சாய்பாபா நேற்று முன்தினம் மாலை, திருவீதி உலா நடந்தது. ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையம் அருகில் இருந்து புறப்பட்டு, காந்தி சாலை, செட்டி தெரு, திருமங்கையாழ்வார் தெரு என, முக்கிய வீதிகளில் சாய்பாப வீதி வந்தார். ஏராளமான பக்தர்கள் கோலாட்டம், பக்தி பஜனைகள் உடன், ஆடி பாடி வீதியில் வந்தனர்.