தேவகோட்டை : தேவகோட்டை நால்வர் கோயிலில் திருஞானசம்பந்தர் குருபூஜை விழா நடந்தது. நால்வர்மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தன. நீலா, தையல்நாயகி, நாராயணன், வள்ளிக்கண்ணு, ராமசாமி ஆகியோர் ஞானசம்பந்தரின் தேவாரபாடல்களை பாடினர். கவிஞர் அருசோமசுந்தரன் தலைமையில் கருத்தரங்கம் நடந்தது. பேராசிரியர்கள் அருணாசலம், தேவநாவே, சுப்பையா, பாதயாத்திரைகுழு நிர்வாகி காசிநாதன், லயன்ஸ் நிர்வாகி கார்மேகம், பழநியப்பன் பேசினர்.