பதிவு செய்த நாள்
17
ஜூன்
2014
12:06
மாமல்லபுரம்: சிற்பக்கூட சிலை உடைக்கப்பட்டதாக, போலீசில் புகார் செயப்பட்டுள்ளது. மாமல்லபுரம் அடுத்த, அம்பாள்நகரில், சிற்பக்கலைக்கூடம் நடத்தி வருபவர் வேதகிரி, 42. தனியார் கோவில் தேவைக்காக, இவரது கூடத்தில், ஐந்து அடி உயர, கருமாரியம்மன் சிலை செய்து வைத்திருந்தனர். அதன் மதிப்பு, 1.50 லட்சம் ரூபாய்; நேற்று முன்தினம் காலை 9:30 மணிக்கு, அவர், கூடத்தை திறந்தபோது, கருமாரிய ம்மன் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பதை கண்டு, வேதகிரி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து, வேதகிரி அளித்த புகாரின்பேரில், மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.