பதிவு செய்த நாள்
17
ஜூன்
2014
12:06
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த சுண்டம்பட்டி புதுவை நகர் புனித அந்தோணியர் திருத்தல, 45ம் ஆண்டு தேர் திருவிழா வெகு விமர்சையாக நடந்தது. விழாவை முன்னிட்டு, கடந்த, 10ம் தேதி கோவிலில், கொடியேற்றம் நடந்தது. இதனையடுத்து, 12, 13 மற்றும், 14ம் தேதிகளில், மண்ணின் மைந்தர்கள் அருட் பணியாளர்கள், கிருஷ்ணகிரி வட்டார குழுக்கள், மறை மாவட்ட புதிய குருக்கள் ஆகியோரால் திருப்பலி, சிறப்பு மறையுரை நடந்தது. விழாவின், முக்கிய நாளான நேற்று முன்தினம் (15ம் தேதி) காலை, தர்மபுரி மறை மாவட்ட பொருளார் லாரன்ஸ் திருவிழா திருப்பலி மற்றும் புது நன்மை உறுதி பூசுதலை வழங்கினார். மாலை, 6.30 மணிக்கு, தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில், கூட்டு பாடற்திருப்பலி நடந்தது. விழாவின், முக்கிய நிகழ்வான, தேர் பவனி இரவு, 8 மணிக்கு நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில், புனிதர் சிலை வைக்கப்பட்டு, ஊரின் முக்கிய வீதிகள் வழியாக வண்ண, வாண வேடிக்கையுடன் தேர்பவனி நடந்தது. இந்த விழாவில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.