அறநிலைய துறை கோயில்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூன் 2014 12:06
சிவகாசி: தமிழக அரசு அனைத்து அரசு கட்டடங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கோயில்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயில் கட்டடத்தில் விழும் மழைநீர் பாவநாச தீர்த்திற்கு வரும் வகையில் மழைநீர் சேகரிப்பு அமைக்கப்பட்டுள்ளது. கருநெல்லிநாதசாமி கோயில் மழைநீர் ஆறுமுக தெப்பத்திற்கு வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிவகாசி விஸ்வநாதசாமி கோயில் தெப்பத்திற்குள் மழைநீர் வரும் வகையில் குழாய் கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் நமஸ்கரித்தான்பட்டி கரியமால் அழகர் கோயில், எதிர்கோட்டையில் உள்ள வேணுகோபாலசுவாமி கோயில், சத்திரம்செவல்பட்டி காசி விஸ்வநாதசாமி கோயில், உப்புபட்டி காமாட்சி அம்மன் கோயில், புலிப்பாரைப்பட்டி சுந்தராஜபெருமாள் ÷ காயில், வெம்பக்கோட்டை சொக்கலிங்கசாமி கோயில், எம்.புதுப்பட்டி கூடமுடையார் அய்யனார் கோயில் ஆகியவற்றில் மழைநீர் சேகரிப்பு குழிகள் அமைத்து மழைநீர் பூமிக்கடியில் செல்லும் வசதி செய்யப்பட்டுள்ளன. இத் தகவலை கோயில் நிர்வாக அதிகாரி முருகன் தெரிவித்தார்.