பதிவு செய்த நாள்
21
ஜூன்
2014
12:06
சவுகார்பேட்டை : ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் இடம் மீட்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட ரங்கநாதசுவாமி கோவில், சவுகார்பேட்டையில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான, 3,108 சதுர அடி கொண்ட, ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள காலி மனையுடன் கூடிய கட்டடம், நாராயணமுதலி தெருவில் உள்ளது.அதனை, 10 ஆண்டு களாக, ஒரு தனியார் நிறுவனம், வாடகை அடிப்படையில் எடுத்து செயல்பட்டது. அந்த இடத்திற்கு தற்போதைய நில மதிப்பின்படி, மாத வாடகையாக ஒரு லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால், தனியார் நிறுவனத்தார், வெறும் 7,500 ரூபாய் மட்டுமே செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இடத்தை மீட்க, கோவில் நிர்வாகம் சார்பில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி, அந்த இடத்திற்கு ஏற்கனவே பூட்டு போடப்பட்டு இருந்தது. இதற்கிடையே, இணை ஆணையர், விஜயா மற்றும் புரசைவாக்கம் தாசில்தார் சத்தியநாராயணன் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன், அங்கு சென்று, நேற்று காலை பூட்டப்பட்ட அந்த கட்டடத்திற்கு மேல்பூட்டு போட்டு, கோவில் இடத்தை மீட்டனர்.