சோழவந்தான்: திருவேடகம் பிரளயநாதர் கோயிலில், இன்று மாலை 5 மணிக்கு ராகு, கேது பெயர்ச்சி விழா நடக்கிறது. காலை 11 முதல் 12 மணிக்குள் ராகு பகவான் துலாம் ராசியிலிருந்து, கன்னி ராசிக்கும், கேது பகவான் மேஷம் ராசியிலிருந்து மீனம் ராசிக்கும் பெயர்ச்சி அடைகிறார். சீனிவாச ராகவன், பிரசாந்த் சாஸ்திரி தலைமையிலான குழு ஹோமங்கள் நடத்துகிறது.