பதிவு செய்த நாள்
21
ஜூன்
2014
12:06
காவேரிப்பட்டணம்: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரர் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா இன்று நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரர் மடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வேதநாயகி சமேத பெண்ணேஸ்வரர் கோவிலில், ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு, இன்று காலை, 10.30 மணிக்கு பரிகார ஹோமமும், 11.30 மணிக்கு ராகு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் குருக்கள் மோகன்குமார் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.
* காரிமங்கலம் ஸ்ரீ அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு, இன்று காலை, 11 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை, விழாக்குழு தலைவர் எம்.எல்.ஏ., அன்பழகன், குருக்கள் புருஷோத்தமன் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.
* தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவில், நெசவாளர் காலனி விநாயகர் வேல்முருகன் கோவில், கோட்டை ஸ்ரீ மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், அன்னசாகரம் சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவில், அரூர் தீர்த்தகிரீஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில் உட்பட மாவட்டத்தில், பல்வேறு கோவில்களில் ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு, ஸ்வாமிக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது.