பதிவு செய்த நாள்
23
ஜூன்
2014
11:06
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரில் கண்டு பிடிக்கப்பட்ட தீர்த்தங்கரர் சிலை, 2,000 ஆண்டுகள் பழமையானது என, தெரியவந்துள்ளது. கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏனாத்தூர் பகுதியில் உள்ள குளத்தில், வீடு கட்டுவதற்காக மண் எடுக்கப்பட்ட போது, பகுதிவாசிகள் ஒரு தீர்த்தங்கரர் சிலையை கண்டுபிடித்து எடுத்தனர்.
வழிபாடு: அந்த சிலை குறித்து அவர்களுக்கு எதுவும் தெரியாததால், குளக்கரையில் வைத்து வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம், சமண சமய ஆய்வாளர்கள், ஜீவகுமார், ஆதிராஜ் ஆகியோர், அங்கு சென்று ஆய்வு செய்து, அந்த சிலை, 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இ ருக்கலாம் என, தெரிவித்தனர். அந்த சிலையை எடுத்து செல்ல பகுதிவாசிகள் விரும்பவில்லை. அதனால் அந்த பகுதியிலே கோவில் கட்டி வழிபட, சமண சங்கம் மூலம் ஏற்பாடு செய்வதாக, ஆய்வாளர்கள் தெரிவித்தனர். மூன்றடி உயரத்தில், அமர்ந்த நிலையில் இருக்கும் அந்த சிலைக்கு இரு புறமும் சாமரங்கள் உள்ளன.
முத்திரை இல்லை: தலைக்கு மேல் முக்குடை உள்ளது. பிரபை காணப்படுகிறது. சமண சமயத்தில், ௨௪ தீர்த்தங்கரர்கள் இருந்தனர். அவர்களை அடையாளம் கண்டறிய, சிலையின் பீடத்தில், அவரவர்க்குரிய முத்திரை பொறிக்கப்பட்டிருக்கும். அப்படி எந்த முத்திரையும் அந்த சிலையின் பீடத்தில் இல்லை. ஆய்வாளர்கள் ஜீவகுமார், ஆதிராஜ் கூறியதாவது: கடந்த நான்கு ஆண்டுகளாக, சமண சிலைகள் குறித்து ஆய்வு செய்து வருகி÷ றாம். இந்த தீர்த்தங்கரர் சிலைபோல் காவேரிபாக்கம் அடுத்த ஈரால்சேரி, வில்லியம்பாக்கம், ஈக்காடு, படூர்,சிறுதாவூர், ராவத்தநல்லுார் போன்ற இடங்களிலும் கண்டுபிடித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.