பதிவு செய்த நாள்
25
ஜூன்
2014
11:06
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த, ஆனி மாத கிருத்திகை விழாவில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மூலவரை தரிசித்தனர்.திருத்தணி முருகன் கோவிலில், நேற்று ஆனி மாத கிருத்திகையை முன்னிட்டு, அதிகாலை, 4:30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்கவேல், தங்க கிரீடம், பச்சை மாணிக்க மரகத கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது.மயில் வாகனத்தில்...காலை, 10:00 மணிக்கு, மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில், உற்சவருக்கு பால், விபூதி, பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.இரவு, 7:00 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, கோவிலை ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அடுத்த மாதம், 20ம் தேதி ஆடிக்கிருத்திகை என்பதால், சில பக்தர்கள் நேற்றே காவடிகளுடன் மலைக்கோவிலுக்கு வந்து மூலவரை தரிசித்தனர். காலை, 6:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் முருகப் பெருமானை தரிசித்தனர். திருத்தணி இன்ஸ்பெக்டர் சிகாமணி தலைமையில், 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.திருப்போரூர் : திருப்போரூரில், ஆனி கிருத்திகை விழா, நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவை ஒட்டி கோவில் நடை, அதிகாலை 4:00 மணிக்கு திறக்கப்பட்டது.ஏராளமான பக்தர்கள், முடிகாணிக்கை செய்து, சரவணப் பொய்கையில் நீராடினர். பின்னர், நீண்ட வரிசையில் நின்று அர்ச்சனை செய்து வள்ளி, தெய்வானை உடனான கந்த சுவாமியை வழிபட்டனர். பிற்பகல், 2:30 மணிக்கு, உற்சவருக்கு மகா அபிஷேகம்