கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில் தேரோட்டம் நடத்த தீர்மானம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூன் 2014 12:06
கம்பம்: கம்பராயப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் தேரோட்டம் நடத்த இந்துசமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கம்பத்தில் நடந்த இந்து முன்னணி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கம்பத்தில் இந்து முன்னணி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் ராஜகுருபாண்டியன் தலைமை வகித்தார். நகர் தலைவர் சசிக்குமார் முன்னிலை வகித்தார். பொருளாளர் லோகநாதன் வரவேற்றார். திருவள்ளூர் மாவட்ட தலைவரை கொலை செய்த கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தப்பட்டது. கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில் தேரோட்டத்தை ஆண்டுதோறும் நடத்தவும், புதுப்பாலம் பகுதியில் கொடிக்கம்பங்கள், தகவல் பலகைகளை அகற்றிய நகராட்சி மற்றும் போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட அமைப்பாளர் கோம்பை கணேசன் உட்பட பலர் பேசினர்.