தாண்டிக்குடி : தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை விழா நடந்தது. விழாவில் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. விளக்கு பூஜை, மலர்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். மலைக்கோயிலில் தேரோட்டமும் தொடர் ந்து அன்னதானம் நடந்தது. தோணிமலை முருகன் கோயிலில், கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பால், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. தருமத்துப்பட்டி சுப்பிரமணியசுவாமி கோயில், தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், கார்த்திகையை முன்னிட்டு விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.