காரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வன் பகவான் கோவில் ஆப்ரேஷன் ஆம்லா என்ற பாதுகாப்பு ஒத்திகையில் கோவிலுக்கு வரும் பக்தர்களை போலீ சார் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர். காரைக்கால் மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பு ஒத்திகையான ஆப்ரேஷன் ஆம்லா என்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பாதுகாப்பு ஒத்திகையில் காரைக்காலில் உள்ள கோவில்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டனர். திருநள்ளார் சனிஸ்வரன் பகவான், அம்மையார் கோவில், நித்யகல்யானப் பெருமாள்,பெரியப்பள்ளிவாசல், மாதா ஆலயம் உள்ளிட்ட கோவில் தலங்களில் வரும் பக்தர்களின் உள்ள உடைமைகளை போலீசார் தீவிர சோதனை செய்து அனுப்புகின்றனர்.மேலும் தி ருநள்ளார் கோவில் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.