பாதூர் பிரத்தியங்கராதேவி கோவிலில் நிகும்பலா யாகம்!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2014 11:06
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி அம்மன் கோவிலில் ஆனி அமாவாசையையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது. நேற்று காலை 10.30 மணிக்கு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது. யாக குண்டத்தில் பழங்கள், நெய் ஊற்றி, யாகம் வளர்க்க ப்பட்டது. பின்னர் கோவில் பரம்பரை அறங்காவலர் அருணாச்சல குருக்கள் தலைமையில் யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற்ற கோரி வெற்றிலையில் எழுதி குண்டத்தில் கொட்டினர். பிரத்தியங்கராதேவி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். உளுந்தூர்பேட்டை ஓய்வு பெற்ற போலீஸ்காரர் தங்கவேல் அன்னதானம் வழங்கினார். உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், கடலுõர் உட்பட பல பகுதிகளில் இருந்து பலர் தரிசனம் செய்தனர்.