பதிவு செய்த நாள்
02
ஜூலை
2014
02:07
ஆத்தூர்: ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷனில், தொடர் பிரச்னையை தவிர்க்கும் வகையில், "பஞ்சமுக ஆஞ்சநேயர் ஃபோட்டோ வைத்து வழிபட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆத்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில், 1873ம் ஆண்டு, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், போலீஸ் ஸ்டேஷன் துவங்கப்பட்டது. கடந்த, 2013, செப்டம்பர், 17ம் தேதி முதல், ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷன், நரசிங்கபுரம் நகராட்சி, விநாயகபுரத்தில் உள்ள, ஆத்தூர் டி.எஸ்.பி., அலுவலக வளாகத்தில் கட்டப்பட்ட, புதிய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. சாலை விபத்து, கற்பழிப்பு புகார் என, அதிகளவில் ஏற்படுவதுடன், போலீஸார் பலர் பணிமாறுதலில் சென்று விட்டனர். சேலம் சரக டி.ஐ.ஜி., மற்றும் மாவட்ட எஸ்.பி., ஆகியோர், ஆய்வு செய்து, ஆத்தூர் போலீஸாரை எச்சரித்ததால், கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். அதனால், போலீஸ் ஸ்டேஷனில், பொதுமக்கள் புகார் அளிக்கும் இடத்தில், "பஞ்சமுக ஆஞ்சநேயர் ஃபோட்டோ வைத்து, வழிபாடு செய்து வருகின்றனர். ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷனில், ஆஞ்சநேயர் ஃபோட்டோ வைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.