பதிவு செய்த நாள்
02
ஜூலை
2014
02:07
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம், வரும், ஏழாம் தேதி அதிகாலை, நான்கு மணி முதல், யாகசாலை பூஜைகள் துவங்கி நடக்கிறது. காலை, ஒன்பது மணிக்கு, யாக சாலையில் இருந்து, கலசங்கள் புறப்படுகிறது. தொடர்ந்து மூலவர் மூலாலய கோபுரம் , மார்க்கண்டேஸ்வரர் உமைய வள்ளி கோபுரங்கள், காசி விஸ்வநாதர் காசி விசாலாட்சி கோபுரங்கள், புதிய ஐந்து நிலை ராஜகோபுரம் ஆகிய கோபுரங்களுக்கு, சமகால கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை பத்து மணிக்கு மேல், 10.30 மணிக்குள், மூலவர் சென்னிமலை ஆண்டவருக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், திருப்பூர், கோவை, கரூர், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். அன்று மாலை, நான்கு மணிக்கு, மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடக்கிறது. கும்பாபிஷேகத்தன்று, காலை, எட்டு மணி முதல், மலை அடிவாரம், செங்குட்டை தோட்டத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. கும்பாபிஷேகத்துக்காக, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும், ஐந்தாம் தேதி இரவு, ஏழு மணிக்கு மலை கோவில் வளாகத்தில், தேச மங்கையர்கரசியின் ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது. ஆறாம் தேதி இரவு, ஏழு மணிக்கு மலை கோவில் வளாகத்தில், வீரமணிராஜா வழங்கும் பக்தி இன்னிசையும், ஏழாம் தேதி இரவு, ஏழு மணிக்கு மலை கோவில் வளாகத்தில், ஏ.எஸ்.அருண் வழங்கும் பக்தி இன்னிசையும், அன்று இரவு, ஒன்பது மணிக்கு சென்னிமலை வடக்கு ராஜ வீதியில், ஈரோடு ஜகன் ஸ்ருதி வழங்கும், பக்தி இன்னிசை நடக்கிறது. எட்டாம் தேதி இரவு, ஏழு மணிக்கு, மலை கோவில் வளாகத்தில், நித்யஸ்ரீ மகாதேவனின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.