ராஜபாளையம்: ராஜபாளையம் பெத்தவநல்லூர் மாயூரநாதசுவாமி கோயில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றம், நேற்று துவங்கியது. நந்திக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. மாயூரநாதசுவாமி, அஞ்சல்நாயகி அம்மன் நடுமண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். அடுக்கு தீபாராதனைகள் நடந்தன. ஜூலை 8ல் திருக்கல்யாணம், ஜூலை 10ல் தேரோட்டம் நடைபெற உள்ளன. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி அறிவழகன் மற்றும் ஊழியர்கள் செய்தனர்.