Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் நடராஜர் தேரோட்டம் ... விநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரம்! விநாயகர் சிலைகள் செய்யும் பணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெயில், மழையில் வீணாகும் வீரட்டானேஸ்வரர் தேர்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2014
02:07

பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் திருத்தேர் வெயில், மழையில் நனைந்து வீணாவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை   எடுக்க வேண்டும். பண்ருட்டி திருவதிகையில் 2000ம் ஆண்டு பழமை வாய்ந்த பாடல் பெற்ற அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் திருத்தேர் 10 ஆண்டுகளுக்கு பிறகு அறநிலையத்துறை மற்றும் பொதுமக்கள் பங்களிப்பின் மூலம்  கடந்த 2012ம்   ஆண்டு 30 லட்சம் செலவில்  பராமரிப்பு பணிகள் நடந்தது. பின்  கடந்த 2013ம் ஆண்டு வைகாசி மாதம்  உற்சவத்தில் திருத்தேர் வீதியுலா நடந்தது.பிரம்மோற்சவம் நடந்து முடிந்த பின் அறநிலையத்துறை அதிகாரிகள் திருத்தேரின் பாகங்கள் வெயில் மற்றும் மழையில் நனைந்து வீணாகாதபடி தி  ருத்தேருக்கு இரும்பு தகடுகளால் நிழற்குடை ஏற்படுத்தவோ அல்லது, தேரின் முழு பகுதியையும் பாதுகாத்திட எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.   திருநாவுக்கரசர் தொண்டு நிறுவனத்தினர் பழைய டிஜிட்டல் பேனர்களை கட்டி பெரிய பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்தனர். இந்நிலையில் கடந்த 12ம்   தேதி திருத்தேர் உற்சவம் நடந்தது. பின் திருத்தேரை பாதுகாத்திட எவ்வித முயற்சியும் இல்லாததால் திருத்தேர் வெயில், மழையில் நனைந்து பாதித்து   வருகிறது. புதிய தேர் செய்ய தற்போது ஒரு கோடி ரூபாய் செலவாகும் நிலையில் பழமை வாய்ந்த தேரை பாதுகாத்திட அறநிலையத்துறை   அதிகாரிகள் முயற்சிக்காதது வேதனைக்குரியது. இதற்கு மாவட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar